1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (15:10 IST)

அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும் 
என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது