1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:45 IST)

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாகவும் இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்ட செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் சில குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் கூறி உள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது 
 
மேலும் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவிஅரசன் அவர்கள் கூறியுள்ளார். வட கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்றும் இந்த மழையால் கிடைக்கும் தண்ணீர் வரும் கோடை காலத்திற்கு பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது