பகல் 1 வரை சென்னை உள்பட 21 மாவட்டங்களில் கனமழை! வானிலை எச்சரிக்கை..!
இன்று பகல் ஒரு மணி வரை சென்னை உள்பட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெற்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கும் நிலையில், சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தேனி ஆகிய 21 மாவட்டங்களில் இன்று பகல் ஒரு மணி வரை கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இன்று வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் இதன் காரணமாக வட தமிழக, புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran