1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (18:59 IST)

சென்னையின் பல இடங்களில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்கும் நிலை இருப்பதாலும் வங்க கடலில் குறைந்த அழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது
 
மேலும் இன்று காலை வெளியான தகவலின்படி 6 மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த மழை காரணமாக சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
சென்னையில் வடபழனி, அரும்பாக்கம், தி.நகர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக்கேணி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது