தமிழகத்தில் இன்று எங்கெங்கு மழை தெரியுமா??
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
கடந்த சில நாட்களாக சொல்லப்பட்டு வந்தது போல அந்தமானை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.