1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (12:34 IST)

புயல் வீசினாலும் சமாளிக்க அரசு தயார் - முதல்வர் பழனிசாமி

புயல் வீசினாலும் சமாளிக்க தமிழக அரசு தயார் என முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக சொல்லப்பட்டு வந்தது போல அந்தமானை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
 
இந்நிலையில் இது குறித்த ஆலோசனைகளை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயல் வீசினாலும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது. 
 
புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளன. புயல் காலத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மீட்புப்படையினர் தயாரான உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.