1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy flood in nilagiri district

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வெள்ளப் பெருக்கால் பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
கனமழை காரணமாக கூடலூர் சுற்றியுள்ள ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்.ஆறுகளின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இருவயல் கிராமத்தில் தண்ணீரில் குடியிருப்புகள் தத்தளித்து வருவதாகவும் கூறப்படுகிறாது.
 
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும், மாயாறு மற்றும் தொரப்பள்ளி ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஏற்கனவே பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பை விரைவில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பாளர் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை