முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை குமுளி அருகே உள்ள முல்லை பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழையாக பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வினாடிக்கு 1048. 75 கன அடியாக இருந்து அணையின் நீர்வரத்து,இன்று காலை நிலவரப்படி 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணை நீர்மட்டம் 118. 55 அடியாகவும் அணையின் மொத்த கொள்ளளவு 2366. 55 மில்லியன் கனடியாக உள்ளது.
அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 878. 00 நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது