1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 29 ஜூன் 2024 (12:19 IST)

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

soldiers death
காஷ்மீரில் ராணுவ பயிற்சியின் போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீர் உள்ளிட்ட எல்லை பகுதிகளில்  பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இன்று காஷ்மீரின் லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ராணுவத்தின் ஈடுபட்டனர்.
 
மந்திர் மோர் என்ற பகுதியில் டேங்கை வைத்து ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டபோது ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. அப்போது டேங்க் கவிழ்ந்து விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் நீரில் மூழ்கி ஐந்து ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆற்றில் நீர் திடீரென அதிகரித்ததால் ஏற்பட்ட விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.