1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஜூலை 2022 (07:45 IST)

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு: பள்ளிக்கல்வித் துறை அதிரடி

education
பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தலைமை ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே வரவேண்டும் என்றும் பள்ளியில் மாணவர்களின் சண்டை பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
மாணவர்களை ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் மாணவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் தண்டனை வழங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கட்டாயம் வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது 
 
பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஏற்பது உடன் மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது