நீட் தேர்வை அதிக மாணவர்கள் எழுதியது சிறப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்
நீட் தேர்வை அதிக மாணவர்கள் எழுதியது சிறப்பானது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
நேற்று நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றதை அடுத்து ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்
தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் நீட் தேர்வு நடந்த நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தில் அமைச்சர் சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்
தொலைபேசியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் கூடுதலாக மாணவ மாணவிகள் பங்கேற்றது சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் நீட் தேர்வு விலக்கில் தமிழக அரசு ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்