1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Head master arrest in sexual torture complaint

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் அதிரடி கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் அதிரடி கைது!

மாணவி
நாகை மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிகளுக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
நகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரில் திருவேங்கடம் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்ததால் தலைமை ஆசிரியர் மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
தினகரன் மீது உச்சகட்ட கோபத்தில் சசிகலா; தூது போன சினிமா பிரமுகர் - நடந்தது என்ன?