திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (12:19 IST)

தமிழகம் மட்டுமல்ல.. 7 மாநிலங்களில் ஹரிநாடார் கைவரிசை! – போலீஸார் விசாரணை!

பெங்களூரு தொழில் அதிபருக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக ஹரிநாடார் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பல மாநிலங்களிலும் ஹரிநாடார் கைவரிசை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பனங்காட்டு படை கட்சியை நடத்தி வரும் ஹரி நாடார் சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் சமீபத்தில் ஹரிநாடார் தனக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி தன்னிடமிருந்து 16 கோடி ரூபாயை பறித்து மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெங்களூர் போலீஸார் கேராளா சென்றிருந்த ஹரி நாடாரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர். இந்நிலையில் ஹரிநாடாரிடம் விசாரணை மேற்கொண்டதில் மேலும் 7 மாநிலங்களில் இதுபோன்ற மோசடி செயல்கள் நடந்தது தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.