வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (20:05 IST)

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நடித்திருக்கிறது – நடிகை கஸ்தூரி

இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டமும் வியாபர வட்டமும் உள்ள சினிமா தளம் பாலிவுட். அங்கு சமீபகாலமாக பல புகார்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் சுஷாந்த் மரணத்தை அடுத்து, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இதை அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார்.

இதனையடுத்து,  நடிகை கஸ்தூரி நடிகை பாயல் கோஷின் டுவீட்டுக்கு ரீடுவீட் பதிவிட்டுள்ளார். அதில், சட்டப்படி உறுதியான ஆதரமில்லாமல் பாலியல் குற்றசாட்டுகளை நிரூபிக்க முடியாது. இதில் குறிப்பிட்டுள்ளவர் ஆதாரங்களை அழிக்கக்கூடும் என தெரிவித்திருந்தார். இதற்கு ஒருவர் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதுபோல் நேர்ந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா எனக் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த கஸ்தூரி எனக்குத் தெரிந்தவர்கள் என்ன எனக்கே அது நடந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What close to me, it has happened to me. It is how it is. #behindcloseddoorshttps://t.co/KwWUyiaIXG
— Kasturi Shankar (@KasthuriShankar) September 21, 2020