1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (12:01 IST)

அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது: பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

வழக்கமாக கிறிஸ்மஸ் திருவிழாவையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்பதும் இந்த விடுமுறை ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்பது தெரிந்ததே.
 
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
 
எனவே இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது ஏற்கனவே பள்ளிகளுக்கு பாடங்கள் நடத்த வேண்டிய பாடங்கள் அதிகம் இருப்பதால் இந்த விடுமுறையை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது