1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools and colleges holiday for nilagiri district

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை!

பள்ளிகள்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
 
நீலகிரி மாவட்டத்தில் நாளை அதாவது டிசம்பர் 22ஆம் தேதி ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விடுமுறை நாள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
பிரதமர் பதவி விலக வேண்டும்… பாகிஸ்தான் எதிர்க்கட்சி ஆவேசம்!