”திருவள்ளுவரை மதித்தால் பெரியாரை ஏற்ககூடாது”.. திமுக மீது பாயும் ஹெச்.ராஜா
திருவள்ளுவரை ஏற்பதாக இருந்தால், தமிழை காட்டுமிராண்டி மொழி என பேசிய பெரியாரை ஏற்க கூடாது என ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் காவி உடையணிந்து வெளியான புகைப்படத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் பலரும் பாஜகவினரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹெ,ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக திக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை குறிப்பிட்டு “ஈ.வெ.ரா. (பெரியார்) தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறினார், திருக்குறளை அருவருக்கத்தக்க முறையில் விமர்சித்தார்” என கூறியுள்ளார்.
மேலும், திருவள்ளுவரை மதிப்பதாக இருந்தால், திக, திமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஈ.வே.ராவை ஏற்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார். திருவள்ளுவரை ஹிந்துத்துவாக்குள் அடைக்க பாஜக முயன்று வருவதாக திராவிட கருத்தாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஹெச்.ராஜா இவ்வாறு டிவிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.