1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H Raja supports Congress for his speech

அழகிரி பேசுனதுல என்ன தப்பு? – காங்கிரஸுக்கு எச்.ராஜா சப்போர்ட்!?

Tamilnadu
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸூக்கு ஆதரவாக எச்.ராஜா பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பான தீர்மானத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் பல வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் எழுவர் விடுதலை குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய அரசியல் கட்சிகள் கோருவது ஏற்புடையதல்ல. கொலை குற்றத்தில் சிறை சென்றவர்களை குற்றவாளிகளாகதான் கருத வேண்டுமே தவிர, தமிழர்களாய் அல்ல” என்று கூறியிருந்தார்.

கே.எஸ்.அழகிரியின் கருத்துக்கு கூட்டணி கட்சியான திமுகவே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் எச்.ராஜா ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எச்.ராஜா “சரியான கருத்து. பாரதியார் கூட வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் என்று தான் பாடினார். வாழ்க தமிழர் என்று பாடவில்லை. ஏனெனில் தீய தமிழர்கள் வாழ்க என்று சொல்வது சரியல்ல.” என்று கூறியுள்ளார்.

About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
திருவள்ளுவர் கெட்டப்பில் கமல்; புதிய திருக்குறள் – வைரலாகும் பர்த்டே போஸ்டர்