செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (14:56 IST)

எழுவர் விடுதலையில் காங்கிரஸ் சர்ச்சை; பல்டி அடித்த திமுக!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கருத்தை ஏற்க முடியாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பான தீர்மானத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் பல வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் எழுவர் விடுதலை குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய அரசியல் கட்சிகள் கோருவது ஏற்புடையதல்ல. கொலை குற்றத்தில் சிறை சென்றவர்களை குற்றவாளிகளாகதான் கருத வேண்டுமே தவிர, தமிழர்களாய் அல்ல” என்று கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கருத்து குறித்து பேசியுள்ள திமுக ஆர்.எஸ்.பாரதி “ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைபாடு. கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கூட்டணி என்பது வேறு.. கட்சி கொள்கை என்பது வேறு” என்று கூறியுள்ளார்.