செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (12:29 IST)

இந்துக்கள் இந்து கடைகளில் பொருள் வாங்கணும்! – சர்ச்சையான போஸ்டர்; எச்.ராஜா ஆதரவு

இந்துக்கள் இந்து கடைகளில் மட்டுமே பொருள் வாங்க வேண்டும் என உத்தமப்பாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையான நிலையில் அதற்கு ஆதரவாக எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடைகளில் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்தமபாளையத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்துக்கள் அனைவரும் தீபாவளிக்கு இந்து கடைகளில் பொருட்கள் வாங்கி நலிவுறும் இந்து வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வாசகங்கள் உள்ளது. இதுகுறித்து மதரீதியான பாகுபாடை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் ஒட்டியுள்ளதாக போஸ்டர் ஒட்டிய உத்தமபாளையம் இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ள எச்.ராஜா “உத்தமபாளையத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் என்ன தவறு. கிறிஸ்தவ அமைப்புக்கள் கிறித்தவர்கள் மட்டுமே மனு செய்ய வேண்டும் என விளம்பரம் செய்கின்றனர்.அவர்கள் மீது வழக்கு தொடராத காவல்துறை இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.