தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
- சோதனை மேல் சோதனை: கேரளாவில் மீண்டும் பலத்த மழை என எச்சரிக்கை
- பாதிரியாரை விடுவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை - துருக்கியை எச்சரிக்கும் டிரம்ப்
- ஓடு ராஜா ஓடு: திரைவிமர்சனம்
- முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
விமானத்தில் பெட்ரோல் இல்ல; புஷ்பக விமானம் கொண்டு வரட்டா: எச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
எச்.ராஜா எதை பற்றியாவது அல்லது யார் பற்றியாவது டிவிட்டரில் போட்டு விட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். அதற்கு ஏற்றார் போல் நெட்டிசன்களும் எச் ராஜா என்றாலே பாரபட்சமின்றி கலாய்த்துவிடுகின்றனர்.
இந்நிலையில் எச்.ராஜா ஜெட் ஏர்வேஸை திட்டி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், ஜெட் விமானத்தில் பயணிப்பதே பயனில்லாத ஒன்றாகும். 40 நிமிடங்கள் தாமதமானது. போதிய எரிபொருள் இல்லாததால் டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானம் ஜெய்ப்பூரில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியது. பயணிகள் குறித்து அவர்களுக்கு கவலையில்லை என்று டிவிட் செய்து இருந்தார்.
டெல்லியில் விமான போக்குவரத்து நெரிசல் காரணமாக மட்டுமே விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது ஜெட் என ஏர்வேஸ் விளக்கம் அளித்தது. தர்போது இதை வைத்து எச்.ராஜாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அவற்றில் சில உங்களுக்காக...
தலைவா அப்டியே விமானத்துலேந்து குதிச்சு கிகி சேலஞ்ச் பண்ணு தலைவா. வீ ஆர் வெயிட்டிங்...
— Mani Yuvan Dravid (@rahulmanidravid) August 17, 2018
டேய் அட்மின் தலைவன் ராஜாவ விட்டுட்டு நீ எங்க ஊர் சுத்திட்டு இருக்க
— SER (@iam_sers) August 17, 2018
சார் இது பாகிஸ்தான் சதி. விமானி ஆண்டி இந்தியன்னு சொல்லி கலவரத்தை ஏற்படுத்துங்கள்.
— மணிகண்டன் (@mjmaathini) August 17, 2018
அட்மினுக்கு வந்த வாழ்வை பாருங்க. அவரு உங்கள விமானத்துலல்லாம் அனுப்பி வச்சிருக்காரு. ஜாலிதான்
தலைவா பெட்ரோல் போட்டாங்களா இல்லையா??? நான் புஷ்பக விமானம் கொண்டு வரட்டா சும்மா ஜொய்ங்கனு போகும்....
அடுத்த கட்டுரையில்
