வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (15:46 IST)

ஜல்லிக்கட்டு போராட்டமா அது? மது, மாது, பீஃப் ஆறாக ஓடியது: திருந்தாத எச்.ராஜா; மீண்டும் சர்ச்சைக் கருத்து

தொடர்ந்து சர்ச்சைக் கருத்துக்களை கூறி வரும் பாஜக தேசிய செயலாலர் ஹெச்.ராஜா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மது, மாது, பீஃப் ஆறாக ஓடியது என மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது காவல் துறை மற்றும் நீதித்துறையை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கீழ்த்தமாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  
 
இதனையடுத்து உயர்நீதிமன்றம் ஹெச்.ராஜா மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், தற்போது வரை ஹெச்.ராஜா கைது செய்யப்படவில்லை. நேற்று கூட திண்டுகல்லில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். 
 
அப்போது பேசிய அவர் மெரினாவில் நடந்தது ஜல்லிக்கட்டு போராட்டமா? அது போராட்டமே கிடையாது. மது, மாது, பீஃப் ஆறாக ஓடியது என பேசினார்.
உலகமே வியக்கும் அளவிற்கு, ஜல்லிக்கட்டிற்காக போராடிய லட்சக்கணக்கான மக்களை எஹ்.ராஜா இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலர் எச்.ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.