நெஞ்சம் பதைபதைக்கிறது: பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஜி.வி.பிரகாஷ், அன்புமணி ஆவேசம்

VM| Last Updated: திங்கள், 11 மார்ச் 2019 (20:19 IST)
பொள்ளாச்சியில் காதல் வலை வீசி பெண்களை பலாத்காரம் செய்ததுடன், ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்தது. அந்த கும்பலிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் கதறி அழும் பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
இதனை அடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடியோவை பார்த்த ஒவ்வொருவரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இதுதொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், "மிருகங்களிலும் மிக கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது தொடர்பான வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களை பொதுவெளியில் நடமாடவிடுவது சமூகத்துக்கு பேராபத்து என கொந்தளித்துள்ளார்.
 
இதனிடையே இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :