ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (19:43 IST)

கள்ளர் விழாவா? கள்ளழகர் விழாவா? மீண்டும் உளறிய மு.க.ஸ்டாலின்

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அன்றைய தினம் மதுரையில் சித்திரை பெருவிழா கொண்டாடப்படுவதால் தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று மதுரை நகர மக்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.
 
அரசுக்கு எதிரான எந்தவொரு கோரிக்கை என்றாலும் அதில் வலிய வந்து கலந்து கொள்ளும் திமுக, இந்த கோரிக்கையை தங்கள் கட்சியும் முன்வைப்பதாக தெரிவித்தது. மேலும் இதுகுறித்து முக ஸ்டாலின் பேட்டி அளித்தபோது மதுரையில் நடைபெறும் இந்த கள்ளர் விழாவை பற்றி ஏன் தேர்தல் ஆணையம் நினைக்கவில்லை என்பதுதான் எங்களது சந்தேகமாக உள்ளது என்று கூறியுள்ளார். 
 
சித்திரை பெருவிழாவில் ஒரு அங்கமான கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா பற்றி கேள்விப்பட்டுள்ளோம். இதனை கள்ளழகர் விழா என்றும் கூறுவதுண்டு. ஆனால் கள்ளர் விழா என்றால் என்ன? என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். வழக்கம்போல் முக ஸ்டாலின் உளறியதாகவும் ஒரு சிலர் பதிவு செய்து வருகின்றனர்.