1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (19:55 IST)

மசூத் அசாருக்கு மரியாதையா? ராகுல் காந்தியை வறுத்தெடுக்கும் அரசியல் தலைவர்கள்

சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷி முகமமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் தான் காரணம் என்று இந்திய அரசு ஒருசில ஆதாரங்களுடன் கூறி வருகிறது. 40 பலியாக காரணமாக இருந்த இந்த தீவிரவாதியை ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது கூட மரியாதை தருவதில்லை. அந்த அளவுக்கு இந்த நபர் மீது ஒட்டுமொத்த இந்திய மக்களும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
 
ஆனால் இன்று ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசியபோது, 'மசூத் அசார்ஜி' என்று 'ஜி' என்ற மரியாதையுடன் கூறியுள்ளார். காந்திஜி, நேருஜி என மரியாதையுடன் அழைக்கப்படும் ஜி என்ற எழுத்தை ஒரு தீவிரவாதிக்கு ராகுல்காந்தி எப்படி சொல்லலாம் என கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
 
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரை போலவே இன்னும் ஒருசில அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் திக்விஜய்சிங், ஒசாமா பின்லேடனை 'ஒசாமாஜி' என்று அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒருபக்கம் திமுக தலைவர் முக ஸ்டாலின், கள்ளழகரை கள்ளர் என்று உளறி வரும் நிலையில் இன்னொரு பக்கம் மசூத் அசாரை மசூத் அசார்ஜி என்று ராகுல்காந்தி பேசி வருவதும் அந்த கூட்டணிக்கு நல்ல அம்சங்கள் அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.