வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (11:13 IST)

துப்பாக்கி சுடும் பயிற்சியில் விபரீதம்.. சுட்ட மாணவனின் கழுத்தில் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு..!

சென்னை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியில் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட போது குறி தவறி அவரது கழுத்தில் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் என்ற பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளி கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாணவர்கள் பலர் பயிற்சி பெற்று வருகின்றனர்

இந்த பயிற்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் சித்தார்த் என்ற மாணவர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென குறி தவறி அவருடைய கழுத்தில் குண்டு பாய்ந்தது.  ஏர்கன்னில் இருந்து வெளியே வந்த அலுமினிய கொண்டு சித்தார்த்தின் கழுத்திலேயே பாய்ந்ததால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் தற்போது சித்தார்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva