வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (09:51 IST)

இந்திய அணியில் கோலி அளவுக்கு ஆபத்தானவர் இவர்… ஆஸி பயிற்சியாளர் கருத்து!

கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம்பெறாத ராகுல், ஆசியக் கோப்பை தொடரில் மறுவருகை கொடுத்தார். அது முதல் நான்காம் இடத்தில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் உலக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்து நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஆஸி அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் கே எல் ராகுல் கோலி போன்றே மிக ஆபத்தான வீரர் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் ”ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் அவுட்டாகும் வரை நான் ஒய்வெடுக்கவே மாட்டேன். கோலியை போலவே ராகுலும் ஒரு நேர்த்தியான மற்றும் ஆபத்தான வீரர்.” எனக் கூறியுள்ளார்.