வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 23 டிசம்பர் 2023 (07:12 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… காயத்தால் முக்கிய வீரர் விலகல்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், நீண்டகாலமாக இந்திய அணியில் இடத்துக்காக போராடி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் இடம்பெற்று அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்தார்.

அதையடுத்து அவர் அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டார். ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடிய அவர் கைவிரலில் காயமடைந்தார்.

இதன் காரணமாக அவர் அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விளையாடமாட்டார் என சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.