1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 9 மே 2022 (23:22 IST)

கின்னஸ் சாதனை படைத்த 37 கிலோ பேனா!

pen
உலகில் மிகப்பெரிய பேனா ஒன்று உருவாக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஆச்சார்யா மக்குனுரி சுமார் 18அடி 0.53 அங்குலமும், 37.23 கிலோ எடையும், கொண்ட பெரிய பேனாவை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தப் பேனாவில் வீடிவோ அவர் கின்னஸ் உலகச் சாதனையாளர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

இந்தப் பித்தளை உலோகத்தால் பால்பாயிண்ட் பேனாவைச் சுற்றி இந்திய புராணக் காட்சிகள் பொறிக்கப்பட்டுள்ளது.  சாதாரண பேனா மாதிரி ஒரு உலோகக் கோளத்தின் உருளும் செயலால் இந்தப் பேனாவின் நுனி மூலம் எழுத முடிகிறது. இந்தப் பேனாவை சுமார் 4 பேர் தூக்கி ஒரு காகிதத்தில் எழுதினர்.