திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 மே 2022 (16:56 IST)

நேரலையில் பிரச்சனை: 17 தொலைக்காட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த பிரதமர்

pakistan pm 2
நேரலையில் பிரச்சனை: 17 தொலைக்காட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த பிரதமர்
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தொலைக்காட்சி நிர்வாகிகள் 17 பேரை பாகிஸ்தான் பிரதமர் சஸ்பெண்ட் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரிப் என்பவர் லாகூருக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது
 
அப்போது திடீரென நேரடி ஒளிபரப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக நேரலை நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப், நேரலை ஒளிபரப்பாத அரசு தொலைக்காட்சியின் 17 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது