1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (19:47 IST)

கோவையில் கடந்த 13 நாட்களில் குறைந்து வரும் கொரோனா: முழு விவரங்கள்

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சென்னையைப் போலவே கோவையிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. கோவையில் கடந்த 27 ஆம் தேதி 4 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2810 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இதே நிலை நீடித்தால் சென்னை போலவே கோவையிலும் அடிப்படையாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விடும் என்று நம்பப்படுகிறது. கடந்த 13 நாட்களில் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தற்போது பார்ப்போம்
 
04 ஜூன் : 2,810
03 ஜூன் : 2,980
02 ஜூன் : 3,061
01 ஜூன் : 3,332
31 மே 3,488
30 மே 3,537
29 மே 3,692
28 மே 3,937
27 மே 4,734 
26 மே 4,268
25 மே 3,632
24 மே 4,277
23 மே 3,944