+2 பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல் தந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பது குறித்த இறுதி முடிவை நாளை தமிழக அரசு அறிவிக்க இருக்கும் நிலையில் சற்று முன்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பிளஸ் டூ தேர்வு குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்
பிளஸ் டூ தேர்வு குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது என்றும் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்ட பின் இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்
நாளை மதியம் அனைத்து சட்டமன்ற கட்சியின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்ட பின்னர், மருத்துவர்கள் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனையின் அடிப்படையில் அறிக்கை ஒன்று தயார் செய்து முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் பிளஸ் டூ தேர்வு குறித்து நல்ல முடிவை எடுப்பார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்