தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் மருந்தகம், தியாகிகள் ஓய்வூதியம்.. சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு..!
- உதயநிதி துணை முதல்வரானால் சகித்து கொள்வோம்.. வேறு என்ன செய்ய முடியும்: சீமான்
- ஆளுநர் தேநீர் விருந்து.. திமுகவும் புறக்கணிப்பு.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தகவல்..!
- 'தரங் சக்தி 2024'-ந்னும் பெயரிலான சர்வதேச விமான கூட்டு பயிற்சியின் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களின் உதிரி பாகங்கள் கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்!
- ஆளுநர் தேநீர் விருந்து.. திமுக அதிமுகவின் நிலை என்ன?
ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு
இன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்வார் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து வைக்கும் வழக்கம் இருக்கும் நிலையில் இந்த ஆண்டும் தேநீர் விருந்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் நேற்று திமுக இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆளுநரின் அழைப்பை ஏற்று அரசு சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் அரசியல் நிலைப்பாடு வேறு, இது வேறு என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
