ஆளுநர் தேநீர் விருந்து.. திமுகவும் புறக்கணிப்பு.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தகவல்..!
ஆளுநர் வைக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தை ஏற்கனவே திமுகவின் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் தற்போது திமுகவும் புறக்கணிப்பதாக அந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா முடிந்ததும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் தனது மாளிகையில் தேநீர் விருந்து வைப்பார் என்பதும் அந்த தேநீர் விருந்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் ஏற்கனவே திமுகவின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் திமுகவும் புறக்கணிப்பதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அரசு சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்
ஏற்கனவே அதிமுக ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளும் என்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran