ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 26 மே 2021 (13:58 IST)

ஆன்லைன் ஜர்னலிஸ்ட்களுக்கு அரசு அங்கீகார கிடைக்குமா?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் ஒளிப்பதிவாளருக்கு சிறப்பு ஊக்கத் தொகை ரூபாய் 5000 உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே இந்த தொகை 3000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் இழக்க நேர்ந்தால் அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஊடகவியலாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுடன் ஆன்லைன் ஊடகவியலாளர்களையும் மீடியா லிஸ்டில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்று ஆன்லைன் ஊடகங்கள் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில் அனைத்து செய்திகளும் ஆன்லைன் ஊடகங்களிலும் நேரடியாக வெளியிடப்படுகின்றன.
 
ஆன்லைன் ஊடகவியலாளர்கள் நூற்றுக்கணக்கில் உள்ள நிலையில் அவர்களுக்கு தமிழக அரசு இதுவரை எந்தவித அனுமதியும், அங்கீகாரமும் வழங்கவில்லை. இனிமேலாவது ஆன்லைன் ஊடகவியலாளர்களை மீடியா லிஸ்டில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பரிசீலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்