திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (13:06 IST)

எக்ஸிட் போல் முடிவுகள்… திமுக மாவட்ட செயலாளர்கள் ஆன்லைன் மீட்டிங்!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ஆன்லைனில் நடக்க உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

நேற்று வெளியான பெரும்பாலான கருத்துகணிப்புகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அறிவித்துள்ளன. இதனால் திமுகவினர் மகிழ்ச்சியான மன நிலையில் உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை ஆன்லைன் மூலமாக திமுக மாவட்ட செயலாளர்கள் மீட்டிங் நடக்க உள்ளது. இந்த மீட்டிங்குக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.