1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 மே 2021 (09:42 IST)

ஆன்லைனில் ரெம்டெசிவிர் மருந்து: எச்சரிக்கும் சென்னை காவல்துறை!

ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதாக எண்ணி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

 
கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளில் ஒன்றாக ரெம்டெசிவிரை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். இம்மருந்துக்கு முன்பு இருந்த அளவுக்கு பற்றாக்குறை இல்லை என்றபோதிலும், ஆன்லைன் மூலமும் போலியான வலைதளங்களிலும் பணம் செலுத்தி ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
 
இந்நிலையில், யாரும் இணையதள விளம்பரங்கள், ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதாக எண்ணி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு ஏமாந்தவர்கள் சைபர் குற்றப்பிரிவில் 24 மணி நேரத்துக்குள் புகார் தெரிவித்தால் இழந்த பணத்தை மீட்கலாம் என்று தெரிவித்துள்ளது.