ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2021 (08:52 IST)

தமிழக பாஜக தலைவர் போட்டியிடும் தொகுதி இதுவா?

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுக தரப்பில் பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்னும் எந்த கட்சியும் கூட்டணிப் பங்கீடு குறித்து பேசவில்லை. ஆனால் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து பேசி ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஸ்ரீரங்கம் அல்லது தூத்துக்குடி தொகுதியில் நிற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.