திமுக சார்பாக போட்டியிட விண்ணபித்த நடிகர் போஸ் வெங்கட்!

Last Modified ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:28 IST)

நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விண்ணப்பித்துள்ளார்.

மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வெங்கட் அதன் பின்னர் போஸ் வெங்கட் என்றே அழைக்கப்பட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் அவர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் கடந்த ஆண்டு கன்னிமாடம் என்ற படத்தை இயக்கி அதன் மூலம் இயக்குனராகவும் அறியப்பட்டார்.

இந்நிலையில் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட அவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் பேசிய அவர் ‘சில தேர்தலாக இந்த தொகுதியை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டது. இந்த ஆண்டு திமுகவே நிற்கவேண்டும். கட்சி தலைமை விருப்பப்பட்டால் நான் தேர்தலில் நிற்பேன். ஒருவேளை நான் வெற்றிபெற்றால் நான் ஐந்து ஆண்டுகளும் சினிமாவில் நடிக்காமல் சென்னைக்கே செல்லாமல் தொகுதிக்காக பாடுபடுவேன்’ எனக் கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :