திங்கள், 31 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 மார்ச் 2025 (18:34 IST)

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

ஈரான் அணுஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த நாடு இதனை மறுத்து வருகிறது. இதற்கிடையில், ஈரானின் அணு திட்டங்களை கட்டுப்படுத்த புதிய ஒப்பந்தம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி மேற்கொண்டார். அவர் இந்த குறித்து ஈரானுக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அந்த நாடு அதை நிராகரித்து விட்டது.
 
இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காவிட்டால், அந்நாட்டுக்கு பாதுகாப்பு துறையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், தேவையானால் அமெரிக்கா படையெடுத்துத் தாக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், இரண்டாம் கட்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
 
டிரம்பின் இந்த உச்சகட்ட மிரட்டல் ஈரானை கோபமடைந்த ஈரான் மிக நவீன ஏவுகணைகள் கொண்டு தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாக, ஈரான் அரசு அனுமதியுடன் இயங்கும் 'டெஹ்ரான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதற்கான வீடியோக்களையும் ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அமெரிக்க படைகள் உள்ள அனைத்து பகுதிகளையும் அழிக்கக்கூடிய அளவில் மிகப்பெரிய நிலத்தடி ஏவுகணைத் தளத்தை ஈரான் உருவாக்கியுள்ளது.
 
இந்த சூழ்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையேயான நிலைமை உலக நாடுகளுக்கு கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக போர் மூளுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran