1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. government teacher arrested in seyyar

ஆசிரியையை மயக்கமடைய செய்து பாலியல் தொந்தரவு செய்த முதுகலை ஆசிரியருக்கு வலை

மயக்கம்
வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரை மயக்கமடைய செய்து பாலியல் தொந்தரவு செய்த முதுகலை ஆசிரியரை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.


 

திருவண்ணாமலை மாவட்ட, செய்யாறு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் 40 வயது மதிக்கதக்க பெண் வேல் சோமசுந்தரம் நகரில் வசித்து வருகிறார்.

சம்பவந்தன்று அவர் பள்ளிக்கு செல்ல கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம மனிதன் ஒருவன் ஆசிரியையின் முகத்தில் மயக்க மருந்து தெளித்தான். இதில் மயக்கம் அடைந்த ஆசிரியை கண் விழித்து பார்த்தபோது அவரது எதிர் வீட்டில் வசிக்கும் முதுகலை ஆசிரியர் சாண்டில்யன் அருகில் இருந்தார். ஆரியையிடம் அவர் கூறுகையில், யாரோ ஒரு மர்ம நபர் உங்கள் வீட்டில் நுழைந்ததாகவும், உங்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தேன் என்றும் கூறினாராம்.

சாண்டில்யன் மீது சந்தேகம் அடைந்த ஆசிரியை, இது குறித்து செய்யாறு  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் எதிர் வீட்டில் வசிக்கும் முதுகலை ஆசிரியர் திட்டமிட்டு மர்ம  நபரிடம் கைகுட்டையில் மயக்க மருந்து தெளித்து கொடுத்து அனுப்பி  என்னை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றார் என கூறியுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான முதுகலை ஆசிரியர் சாண்டில்யனை வலைவீசி தேடிவருகின்றனர்.
About Writer
bala
அடுத்த கட்டுரையில்
கிரண்பேடியுடன் முதல்வர் மோதல்: அரசியலில் பரபரப்பு