வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களின் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணானதாக புகார்
தஞ்சையில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களை அடையாளப்படுத்தும் விதத்தில் அவர்களின் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணானதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையாக வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு அனுப்பட்டனர்.
அப்பொது தாயகம் திரும்பிவர்களின் கைகளில் சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஐந்து பேருக்கு கையில் சீல் வைக்கப்பட்டது. தற்போது சீல் வைக்கப்பட்ட இடத்தில் அரிப்பு ஏற்பட்டு சீல் புண்ணாகியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகள் ஓவ்வொருவருக்கும் சீல் வைத்தபின் அதைச் சுத்தம் செய்யாமல் அடுத்தவருக்கு வைப்பதால் தான் இப்படி அரிப்பு ஏற்பட்டு சீல் புண்ணாவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.