திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (22:52 IST)

இலவசங்களால் அரசின் கஜானா காலி- நடிகர் சரத்குமார்

sarathkumar
திமுக தவிர அதிமுக, பாஜக கட்சி மூத்த நிர்வாகிகள் என்னிடம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற நிலையில், இதற்காக கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார்,  திமுக தவிர அதிமுக, பாஜக கட்சி மூத்த நிர்வாகிகள் என்னிடம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், தமிழ்  நாட்டில் மட்டுமல்ல தென் மாநிலங்களான கேரளா, ஆந்திர என அனைத்து மாநிலங்களிலும் போதை கலாச்சாரம் பெருகியுள்ளது. பெரும்புள்ளிகளாக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும். திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் கடன் அதிகரித்துள்ளது. 6 லட்சம் கோடியாக இருந்த கடன் 8.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.தொடர்ந்து இலவசம் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்...மக்களே இலவசம் வேண்டாம் என சொல்ல வெண்டும் கல்விக்கும் மருத்துவத்துக்கும் மட்டும்தான் இலவசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.