ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (15:49 IST)

நடிகர் சரத்குமார் நடித்துள்ள ''போர்தொழில் '' படத்தை பாராட்டிய வரலட்சுமி

por thozhil
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அசோக் செல்வன், சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ள புதிய படம் போர் தொழில் படத்தை வரலட்சுமி சரத்குமார் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அசோக் செல்வன். இவர், பீட்சா 2, கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர்,  தற்போது நடித்துள்ள  புதிய படம் போர் தொழில், இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அசோக்  செல்வனுடன் இணைந்து மூத்த நடிகர் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் நடிக்கின்றனர்.

திரில்லர் பாணியில் உருவாகியுள்ள  இப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

விரைவில் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள இப்படத்தின் ஃபர்ட்ஸ்லுக் போஸ்டர்  சமீபத்தில் வெளியானது.  

இந்த நிலையில், போர் தொழில் படத்தை பார்த்த நடிகையும், நடிகர் சரத்குமார் மகளுமான வரலட்சுமி,  ‘’விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள போர் தொழில் படம் ஒரு அற்புதமான படம். இப்படம் முழுக்க சீட்டின்  நுனி இருக்கையில் அமரும் வகையில் இருந்தது. சூப்பர்… அப்பா சரத்குமாரின் நடிப்பு மற்றும் அசோக் செல்வனின் நடிப்பு அவுட்ஸ்டாண்டிங்…. உங்கள் டிக்கெட்டை புக் செய்து கொள்ளுங்கள்'' என்று இப்படத்தைப் பாராட்டியுள்ளார்.