ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 31 மே 2023 (21:07 IST)

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்- நடிகர் சரத்குமார்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். இவர் தற்போது, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள போர் தொழில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அவருடன் இணைந்து நிகிலா விமல் உள்ளிட்ட பலர்  நடித்து வருகின்றனர்.  திரில்லர் பட பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை E4 எண்டர்டெயிண்மென்ட் மற்றும்  எப்ரியல் ஸ்டுடியோஸ் நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் நிறுவம்  தயாரித்துள்ளது.

இப்படம் வரும் ஜூன்9 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  நேற்று இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது நடிகர் சரத்குமார், ''இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.  இப்படத்தின் கதையை இயக்குனர் சொன்ன விதம் பிடித்திருந்தது. இதுபோன்று  யாரும் கதை சொன்னது கிடையாது'' என்றார்.

பின்னர்,  நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த அவர்,'' யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு  வரலாம். விஜய் வந்தால் வரவேற்கிறோம்'' என்று கூறியுள்ளார்