1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate increaes in Chennai

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

Tamilnadi
தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துகொண்டு வருகிறது. 
 
கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியதால் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துகொண்டு வருகிறது. 
 
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.44 உயர்ந்து ரூ.5,084 ஆக விற்பனையாகி வருகிறது. 
 
எனினும் தங்கம் சில மாதங்களுக்கு முன்னர் இருந்த விலைக்கு திரும்புமா என மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
பாஜக கூட்டணி எந்த கட்சியோடும் இருக்கலாம்! – சூசகமாக பேசிய பொன்னார்!