1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate fall down today

தங்கம் விலை குறைவு; பழைய ரேட் எப்போ வரும்?

Tamilnadi
தங்கம் விலை சில நாட்களுக்கு முன்னர் அதிகரித்து இமாலய உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியதால் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது.தற்போது கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.656 குறைந்து ரூ.40,672 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.82 குறைந்து ரூ.5,084 ஆக விற்பனையாகி வருகிறது. எனினும் தங்கம் சில மாதங்களுக்கு முன்னர் இருந்த விலைக்கு திரும்புமா என மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
திமுக முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் கட்சியினர்!