1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold prices peak People shocked

உச்சம் தொட்ட தங்கம் விலை....மக்கள் அதிர்ச்சி

ஆபரணத் தங்கத்தின் விலை
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டளர்கள், அதிகளவு முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை நாள் தோறும் ஏற்றமும் இறக்கமும்
கண்டுவருகிறது. இன்று மேலும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலகளவில் கொரொனா இரண்டாம் அலையின் மேலும் பரவிவருகிறது. எனவே அமெரிக்கா டார்ல், எண்ணெய் போன்றவற்றில் முதலீடு செய்வதைவிட தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.264 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,640 க்கும் ஒரு சவரண ரூ.37,120க்கு விற்பனை ஆகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இனிமேல் தங்கம் வாங்கமுடியாத அளவில் விலை  நாள்தோறும அதிகரித்துவருவது மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு! – காரணம் என்ன?