1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold price fallen down today rate

தங்கம் விலை தொடர்ந்து சரிவு! இன்றைய நிலவரம் என்ன?

Tamilnadu
கடந்த வாரம் முழுவதும் விலை அதிகரித்து வந்த நிலையில் இந்த வாரத்தில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.      

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.56 விலை குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.37,872 க்கு விற்பனை ஆகிறது. இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.7 விலை குறைந்து  ரூ.4,734க்கு விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
எம்.ஜி.ஆருக்கு பிறகு எடப்பாடியார்தான்! – கடம்பூர் ராஜூ உறுதி