வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2020 (11:56 IST)

தங்கம் விலை சரிவு; சவரன் விலை எவ்வளவு? – இன்றைய நிலவரம்!

கடந்த வாரம் முழுவதும் விலை அதிகரித்து வந்த நிலையில் இந்த வாரத்தில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.      

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 விலை குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.37,904 க்கு விற்பனை ஆகிறது. இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.30 விலை குறைந்து  ரூ.4,738க்கு விற்பனையாகிறது.